சாம்பார் சாதம்

தேவவையான பொருட் கள் :

அரிசி – 3/4கப் 
துவரம் பருப்பு-1/2 கப் 
தண்ணீர் – 4கப் 
விருப்பமான காய்கறிகள் -1கப் 
(கேரட், பீன்ஸ்,தக்காளி,வெங்காயம், முருங்கை)
புளி கரைசல் -1/4கப் 
சாம்பார் பவுடர் – 2-3 டேபிள்ஸ்ூன்
மஞ்சள் தூள் – 2-3 டேபிள்ஸ்பூன்
உப்பு -தேவைக்கு
பூண்டு- 7-8
நெய் – 1டீஸ் பூன்
பச்சைமிளகாய் -1
எண்ணெய் – 2-3 டேபிள் ஸ் பூன்

தாளிக்க:
நெய் – 2 டேபிள் ஸ்பூன்
கடுகு-1/2டீஸ்பூன்
சீரகம் -1/2டீஸ்பூன்
காய்ந்த வத்தல் – 2-3(காரத்திற்கேற்ப)
பெருங்காய தூள் – சிறிதளவு
கருவேப்பிலை- சிறிதளவு

செய் முறை:

முதலில் அரிசி,பருப்பு இரண்டையும் தண்ணீர் விட்டு நன்கு அலசி நான்கு 
கப் தண்ணீர் ஊற்றி பத்து 
நிமிடம் ஊற வைக்கவும்.பிறகு அந்த தண்ணீரை வடித்துவிட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி உப்பு , நெய்,ப.மிளகாய்,பூண்டு சேர்த்து குக்கரில் மூன்று விசில் வரை வேக விடவும்.பிறகு ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றிவெங்காயம்,மற்றும் விருப்பமான காய்கறியை போட்டு அத்துடன் சாம்பார் பவுடர்,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.குக்கராக இருந்தால் காய்கறிகள் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி ஒரு விசிலுக்கு வேக விடவும்.காய்கறி வெந்ததும் புளி கரைசல் விட்டு நன்கு கொதித்ததும் நன்கு வெந்த பருப்பு சாதத்தை கலந்து விடவும்.பிறகு தாளிக்க தேவையான பொருட்களை போட்டு தாளித்து சாதத்தோடு சேர்த்து கிளறி மல்லி இலை தூவி பரிமாறவும்.
   பின் குறிப்பு:சாதத்தில் தண்ணீர் அதிகம் நிற்க கூடாது.
   
           “சிம்பிளாக செய்யக்கூடிய சாம்பார் சாதம் ரெடி”.

Comments