Posts

Showing posts from September, 2019

ஃப்ரைட் ரைஸ்

தேவையானவை: இட்லி – 7-8 படத்தில் உள்ளது போல் நறுக்கி கொள்ளவும். வெங்காயம் – 1 குடை மிளகாய் – 1/2 பச்சை மிளகாய் – 4 -5 பூண்டு – ஏழு பல் இஞ்சி – சின்ன துண்டு கருவேப்பிலை – 1 கொத்து சீனி – ஒரு சிட்டிகை உப்பு – தேவைக்கு கொத்தமல்லி – தேவைக்கு எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு சாஸ் : தக்காளி சாஸ் – 2 மே.கரண்டி சோயா சாஸ் – 1 மே.கரண்டி வினிகர் – 1/2 மே.கரண்டி  செய்முறை: வெங்காயம், குடைமிளகாய், பச்சை மிளகாயினை நீட்டமாக நறுக்கி வைக்கவும். பூண்டு , இஞ்சியினை பொடியாக நறுக்கி வைக்கவும். கடாயில் சிறுது எண்ணெய் ஊற்றி காய்ந்த பின்பு நறுக்கிய இட்லியினை கலர் மாறும் வரை ஃப்ரை செய்து எடுத்து தனியாக வைக்கவும். கடாயில் 3 தேக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்த பின்பு நறுக்கிய காய்கறிகளை சேர்க்கவும். கொஞ்சம் வதங்கிய பிறகு சாஸ் ,வினிகரை சேர்க்கவும். நன்றாக கிண்டிவிடவும். சீனிமற்றும் உப்பு சேர்க்கவும். பிறகு இதில் பொறித்த இட்லி துண்டுகளை போட்டு மெதுவாக கிண்டிவிடவும். இட்லியில் சாஸ்வுடன் கல்ந்தபின்பு மூடி போட்டு ஐந்து நிமிடங்கள் குறைந்த தணலில் சமைத்து எடுக்கவும். மேலே கொத்தமல்லி தூவி பரிமார...

காயல் இடியப்ப பிரியாணி

தேவையான பொருட்கள்: இடியப்பம் – 10 பள்ளாரி வெங்காயம் – 2 தயிர் – 2 டேபிள் ஸ்பூன் நெய், எண்ணெய் – சிறிதளவு இஞ்சி, பூண்டு விழுது – 2 டேபிள் ஸ்பூன் பச்சை மிளகாய் – 2 உப்பு – தேவைக்கு ஏலம், கருவாப்பட்டை, ரம்பை இலை, கருவேப்பிலை – சிறிதளவு தேங்காய் பால் – 1/2 கப் செய்முறை:  ஃபரை பேனில் சிறிதளவு நெய், எண்ணை விட்டு அதில் நீள் வாக்கில் அரிந்த வெங்காயத்தை பொன்நிறமாகப் பொரித்துக் கொள்ளவும். ஒரு அகன்ற பாத்திரத்தி்ல் சிறிதளவு நெய் மற்றும் எண்ணை விட்டு அதில் இஞ்சி, பூண்டு விழுது, தயிர், கருவாப்பட்டை, ஏலம், ரம்பை இலை, கருவேப்பிலை, பச்சை மிளகாய், பொரித்த வெங்காயம் ஆகியவற்றை அதன் பச்சை வாடை போகும் வரை வதக்கிக்கொள்ளவும். அத்துடன், அரை கப் தண்ணீர் அரை கப் தேங்காய் பால், உப்பு சேர்த்து இரண்டு நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். கொதித்தவுடன் உதிர்த்து வைத்த இடியப்பத்தைப் போட்டு கிளறி விடவும். தண்ணீர் தன்மை வற்றி இடியப்பம் செட்டாகியதும் அடுப்பை அணைத்து சிறிது நேரம் மூடி வைக்கவும்.

பிரெட் உப்புமா

தேவையான பொருட்கள்: பிரெட் துண்டுகள் – 7 பல்லாரி வெங்காயம் – 1 தக்காளி – 2 மஞ்சள்தூள் – 1/2 தேக்கரண்டி சாம்பார் பவுடர் – 1 மே கரண்டி உப்பு – தேவைக்கு கொத்தமல்லி இலை – சிறுது வெங்காயத்தாள் – அழகரிக்க தாளிக்க: நெய் / எண்ணெய் – 2 மே கரண்டி கடுகு, சீரகம் – 1/2 தேக்கரண்டி காய்ந்த வத்தல் – 2 கறிவேப்பிலை – ஒரு கொத்து முந்திரி – 5 செய்முறை: முதலில் பிரெட் துண்டுகளை சின்ன சதுரங்க துண்டுகளாக நறுக்கி வைக்கவும் . கடாயில் நெய் விட்டு பிரெட் துண்டுகளை கொஞ்சம் பிரட்டி எடுத்து தனியாக வைக்கவும். (டீப் ப்ரை செய்ய தேவையில்லை) அதே கடாயில் சிறுது எண்ணெய் விட்டு காய்ந்த பின்பு தாளிப்பு பொருட்களை போடவும். வதங்கிய பின்பு பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து குறைந்த தணலில் வதக்கவும். நன்றாக வதங்கிய பின்பு மஞ்சள்தூள் , சாம்பார் பொடி , உப்பு சேர்த்து சிறுது தண்ணீர் தெளித்து வதக்கவும். வதங்கிய பின்பு பிரெட் துண்டுகளை போட்டு நன்றாக பிரட்டி விடவும். இரண்டு நிமிடங்கள் மூடி போட்டு குறைந்த தணலில் வேக வைத்து கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கவும். பரிமாறும் பொழுது நறுக்கிய வெங்காயத்தாள் தூவி...

சப்பாத்தி நூடுல்ஸ்

தேவையான பொருட்கள்: சப்பாத்தி – 5 வெங்காயம் – 1 விரும்பிய காய்கறிகள் கோஸ் , கேரட், குடைமிளகாய் – ஒரு கப் இஞ்சி சின்ன துண்டு பூண்டு – 3 பல் பச்ச மிளாகாய் – 3 சோயா சாஸ் – ஒரு மே கரண்டி தக்காளி சாஸ் – ஒரு மே கரண்டி வெங்காயத்தாள் – 2 மே கரண்டி கொத்தமல்லி – சிறுது எண்ணெய் – ஒரு மே கரண்டி செய்முறை: மீந்த சப்பாத்தியினை மெலிசாக நீட்டமாக கட் செய்து எடுத்து வைக்கவும். இது போல் இஞ்சி, பூண்டு, வெங்காயம், காய்கறிகளை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்த பின்பு இஞ்சி, பூண்டு வெங்காயம் போட்டு சிறுது வதக்கவும். கொஞ்சம் வதங்கிய பின்பு அதில் நீட்டமாக நறுக்கிய பச்சைமிளகாய் மற்றும் காய்கறிகளை சேர்த்து வதக்கவும். சிறுது தண்ணீர் தெளித்து மூடி போட்டு குறைந்த தணலில் வேக வைக்கவும். (தண்ணீர் இருக்க கூடாது) காய்கறிகள் வெந்த பின்பு நறுக்கிய சப்பாத்தியினை சேர்க்கவும் நன்றாக பிரட்டி விடவும். அதில் சாஸ் வகைகளை ஊற்றவும். நன்றாக பிரட்டி விட்டு தேவைக்கு உப்பு சேர்த்து இறக்கவும். நறுக்கிய வெங்காயதாள் விரும்பினால் சிறுது எலுமிச்சை சாறு சேர்த்து பரிமாறவும்.

காயல் ஸ்பெஷல் ஃபிஷ் பிரியாணி

தேவையான பொருட்கள் : பிரியாணி அரிசி- 1kg சீலா மீன் – 12 முதல் 15 துண்டுகள் இஞ்சி பூண்டு விழுது –  200g பட்டை,ஏலக்காய்,கிராம்பு – தேவைக்கு நெய் – 150g தேங்காய் எண்ணெய்- 150g மு. பருப்பு – 100g கிஸ்மிஸ்- 10g கசகசா – 50g பாதாம், பிஸ்தா- தேவைக்கு தயிர் – 300g பல்லாரி – 1/2 kg தக்காளி – 1/2 kg எலுமிச்சை பழம்- 1 ப.மிளகாய் – 100g மல்லி புதினா- 100g செய்முறை : முதலில் மீனை கழுவி அதில் உப்பு, மிளகாய்த்தூள் சிறிது இஞ்சி பூண்டு விழுது சேர்த்து ஊற வைக்கவும். பின் வாணலியில் சிறிது தேங்காய் எண்ணெய் ஊற்றி அதில் மீனை பொரித்து எடுக்கவும். 3 அ 4 துண்டு மீனை பொரிக்காமல் வைத்து கொள்ளவும். அதே எண்ணெயோடு மீதமுள்ள தேங்காய் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய வெங்காயம் சிறிதளவு போட்டு வதக்கி கிஸ்மிஸ், மு. பருப்பு போட்டு வெங்காயம் பொன்னிறம் வரும் வரை பொரித்து எடுத்து கொள்ளவும். பின்னர் அதே எண்ணெயில் இஞ்சி பூண்டு விழுது, தயிர், பட்டை, கிராம்பு, ஏலக்காய், ரம்ப இலை (அ) பிரியாணி இலை போட்டு தாளிக்கவும். பின்னர் ஊற வைத்த (பொரிக்காத)மீன் நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகா...

சீஸ் பிரெட் சான்விச்

தேவையான பொருள்: சான்விச் பிரட் -6 மட்டன்-300 கிராம் முட்டை -2 சின்ன வெங்காயம் -10 ப.மிளகாய்-1 மஞ்சல் தூள்-1/4tsp மிளகாய்த்தூள்-1/4tsp மிளகுத்தூள்-1/4tsp சின்ன சீரகம்-1/4tsp நெய்-200grm கார்லிக்பேஸ்ட் -1 கப் மொஞரெல்லா சீஸ்-100grm ரஸ்க் தூள் -100grm ரெட் சில்லி சாஸ்- 4tsp டொமட்டோ சாஸ்-3tsp சோயா சாஸ்-1tsp எண்ணெய்-3tsp கொத்தமல்லி தழை -தேவைக்கு உப்பு -தேவைக்கு செய்முறை: 1 கறியை நன்றாக சுத்தம் செய்தது கறிமசால் தூள் உப்பு இஞ்சி பூண்டு போட்டு வேக வைத்து நன்றாக வெந்ததும் மிக்ஸியில் ஒரு சுற்று போட்டு தனியாக வைத்துக் கொள்ளவும். 2. பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் நறுக்கி வைத்திருக்கும் சின்னவெங்காயம்,மிளகாய்,மஞ்சல்தூள்,மிளகாய்த்தூள்,மிளகுத்தூள்,சின்ன சீரகம்,உப்பு,3ன்று சாஸ், இவை அனைத்தையும் நன்றாக வெந்ததும் அதில் வேக வைத்த அந்த கறியை போட்டு கிளறி 2 நிமிடம் கழித்து அடுப்பை அனைத்து தனியாக வைத்துக் கொள்ளவும். 3.பிரட்டை சப்பாத்தி வலக்கும் கட்டையால் நன்கு வலத்து வைத்துக் கொள்ளவும். 4.பிறகு இரண்டாக கட் செய்து படத்தில் உள்ள படி மொஞரெல்லா சீஸை துருவி போட்டு அதன் மே...

எலுமிச்சை சாதம் & உருளை கிழங்கு பொறியல்

எலுமிச்சை சாதம் தேவையானவை அரிசி…2 டீ டம்ளர் தண்ணீர்… தேவைக்கு உப்பு… தேவைக்கு தாளிக்க எண்ணெய்.. 1 குழி கரண்டி கடுகு.. கொஞ்சம் கறிவேப்பிலை.. கொஞ்சம் காய்ந்த மிளகாய்… 2 உளுந்து… கொஞ்சம் முந்திரி பருப்பு… 2 ,3 எலுமிச்சை பழம் … 1 (சாறு) செய்முறை அரிசியை நன்கு கழுவி , அளவு தண்ணீர், உப்பு போட்டு சமைக்கவும் கடாயில் எண்ணெய் ஊற்றி சிறிது கடுகு.. கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், உளுந்து, முந்திரி பருப்பு, கொஞ்சம் உப்பு, தேவை என்று நினைத்தால் கொஞ்சம் காயல் மசாலா தூள் சேர்த்து தாளிக்கவும் சாதம் போட்டு கிளறவும்..  பிறகு அதில் எலுமிச்சை சாறு கலந்து நன்றாக கிளறிவிடவும். எலுமிச்சை சாதம் தயார் உருளை கிழங்கு பொறியல் தேவையானவை உருளை கிழங்கு..2 உப்பு… தேவைக்கு தனி மிளகாய் தூள்.. ½ தே கரண்டி கடுகு.. கொஞ்சம் கறிவேப்பிலை.. சிறிது செய்முறை உருளை கிழங்கை வெறுமனே ஒரு குக்கரில் வேகவைக்கவும்.. பின் தோல் நீக்கி, சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்து வைத்து கொள்ளவும் உப்பு ,தனி மிளகாய் தூள், சேர்க்கவும் கடாயில் எண்ணெய் ஊற்றி சிறிது கடுகு.. கறிவேப்பிலை, உருளை கிழங்கையும் சேர்...

இடியப்பம் குஸ்கா

தேவையான பொருட்கள்: இடியப்பம் -5 to 6 வெங்காயம் -1பெரியது தக்காளி – 1 பெரியது பச்சைமிளகாய் -2 மல்லி இலை ,புதீனா இலை மஞ்சள் தூள் -1spn மசாலா தூள் -2tsp கரம் தூள்-1 tsp.  முந்திரி பருப்பு- 10 கிஸ்மிஸ்-10 பட்டை -1 கிராம்பு-2 ஏலக்காய் -2 இஞ்சி பூண்டு விழுது  – 2 tsp நெய் -3tsp எண்ணெய் -2 tsp செய்முறை; முதலில் அண்டிப்பருப்பு கிஸ்மிஸ் இரண்டையும் நெய் விட்டு வறுத்து தனியாக எடுத்து வைக்கவும். பிறகு ஓரு சட்டியில் நெய் எண்ணெய் ஊற்றி சுடானதும் பட்டை கிராம்பு ஏலக்காய் போடனும். பிறகு வெங்காயம் சேர்த்து நல்ல பொன்னிறம் ஆகும்வைர வதக்கவும், பிறகு தக்காளி  பச்சைமிளகாய் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும், பிறகு அனைத்து மசாலாவையும் சேர்த்து நன்றாக மசாலா வதங்கும் வரை வதக்கவும். எல்லாம் வதங்கியதும் எண்ணெய் பிரிந்து வரும் இப்பொது இடியப்பத்தை உதிர்த்து போட்டு நன்றாக கிளறிவிட்டு,வறுத்த அண்டிப்பருப்பு கிஸ்மிஸ், புதீனா கொத்தமல்லி மேல தூவி 10 நிமிடம் சிம்மில் வைத்து அடுப்பை அனைக்கவும் இடியப்பம் குஸ்கா  ரெடி

மட்டன் சப்பாத்தி ரோல்

தேவையான பொருட்கள் சப்பாத்தி – 10nos எலும்பில்லாத மட்டன்- 1 Kg இஞ்சி பூண்டு விழுது – 2 மே.கரண்டி மஞ்சள்தூள் -1/2 tsp மிளகாய் தூள் -1/2 tsp கரம் மசாலா -1/4 tsp சீரக தூள்-1/4 tsp தயிர் -1/2 cup ஆயில் -3 tbsp முட்டை -1 லெமன் ஜூஸ் அரை மூடீ வெங்காயம்- 3 பொடியாக நறுக்கியது தக்காளி- 2 ப.மிளகாய் -3 பொடியாக நறுக்கியது மல்லிதழை பொடியாக நறுக்கியது உப்பு தேவைக்கு செய்முறை: 1.ஒரு பவுலில் நறுக்கிய மட்டனுடன் தயிர், இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், மிளகாய் தூள்,கரம் மசாலா, சீரக தூள், லெமன் ஜூஸ், சேர்த்து நன்கு பிசிறி 1Hr ஃபிரிட்ஜில் வைக்க வேண்டும். 2.பின்னர் வாணலியில் 3 Tbsp ஆயில் விட்டு ஏலம், பட்டை, கிராம்பு போட்டு பொறிந்ததும் நறுக்கிய வெங்காயம் போட்டு பொன்னிறமாக வதக்கவும் பின், தக்காளி,ப.மிளகாய் போட்டு இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து வதக்கி ஃபிரிட்ஜில் வைத்திருக்கும் மட்டன் கலவையை போட்டு அரை கப் தண்ணீர்விட்டு மூடி வைத்து வேக விடவும். மசாலா நன்கு சுருண்டு வெந்ததும் மல்லி தழை தூவி கிளறி இறக்கவும். இப்போ ஸ்டப்பிங் தயார். 3.தேவையான அளவு சப்பாத்தி எடுத்து கொள்ளவும். முட்டையை கலக்...

சில்லி தோசை

தேவையானப் பொருட்கள்:- தோசை மாவு=தேவைக்கு வெங்காயம்=2கொஞ்சம் பெரிது தக்காளி=1 பெரியது காரட்=1 துருவியது ப.மிகாய்=1 கொ.மல்லி இலை=கொஞ்சம் மஞ்சள் தூள்=½tsp வத்தல் தூள்=½tsp கரம் மசாலா =½tsp சோயா சாஸ்=½tsp தக்காளி சாஸ்=1tsp சோடா உப்பு=1சிட்டிகை உப்பு=தேவைக்கு எண்ணெய் =தேவைக்கு செய்முறை :- தோசை மாவில் உப்பு,சோடாப்பு போட்டு ஸ்பாஞ்ச் தோசைகளாக ஊற்றவும்.தோசைக்கல்லில் மாவைக் கொஞ்சம் தடிமனாக ஊற்றி மூடிப்போட்டு சிம்மில் வைத்து ஒருப்பக்கம் மட்டும் வெந்து எடுத்தால் ஸ்பாஞ்ச் தோசை ரெடி.இப்படி அனைத்து தோசைகளும் சுட்டு சிறுசிறு க்யூப்களாக வெட்டி வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் போட்டு வதக்கவும்.பின் தக்காளி,காரட்,பொடியாக நறுக்கிய ப.மிளகாய் சேர்த்து உப்பு போட்டு நன்கு வதக்கவும். பின்பு வத்தல் தூள்,கரம் மசாலா தூள்,மஞ்சள் தூள் சேர்க்கவும்.நன்கு சேர்ந்ததும் சோயா சாஸ்,தக்காளி சாஸ் ஊற்றி கிளறி,வெட்டி வைத்த தோசை களை போட்டு நன்கு கிளறவும்.கொ.மல்லி இலை போடவும்.மசாலாக்கள் அனைத்தும் தோசையில் நன்கு சேர்ந்ததும் அடுப்பை அணைக்கவும்.

முர்தபா

தேவையானவை :  கோதுமை – ½ கிலோ  சிக்கன் – 200 கிராம்  பட்டாணி – 100 கிராம்  வெங்காயம் – ¼ கிலோ  முட்டை – 8  கோஸ் – 100 கிராம்  கேரட் – 50 கிராம்  கருவாப்பிலை – 1 கொத்து  மல்லி இலை – 1 கொத்து  மஞ்சள் தூள் – 2 டீ ஸ்பூன்  எண்ணெய் – 3 டீ ஸ்பூன்  கீரைப்பொடி – 2 டீ ஸ்பூன்  துருவிய தேங்காய் – 1 கப்  உப்பு – தேவையான அளவு செய்முறை   கோதுமையை கொஞ்சம் எண்ணெய்,உப்பு,தண்ணீர் ஊற்றி ரொட்டி மாவு பதத்திற்கு ஒன்று போல் நன்கு சேர்க்கவும். அரை கிலோ கோதுமைக்கு 15 ரொட்டிகள் வரும்.  சிக்கனை தயிர், இஞ்சி பூண்டு,மசாலா மற்றும் உப்பு போட்டு வேகும்வரை வரட்டவும்.  பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி,உப்பு,வெட்டிய வெங்காயம், கோஸ்,கேரட்,பட்டாணி,கருவேப்பிலை மற்றும் மஞ்சள்தூள் இவைகளை போட்டு நன்கு வதக்கவும்.  வெங்காயம் வதங்கிய பிறகு மல்லி இலை, துருவிய தேங்காய் இவைகளை போட்டு கிளறி விடவும்.  தேங்காய் கொஞ்சம் கனிந்து சேர்ந்த பிறகு கீரைப்பொடியை போட்டு கிளறி விட்டு இறக்கவும்.  அடுப்பில் ரொட்டி தவாவை வைத்து தவா கொஞ்சம் காய்ந்ததும், 2 டீ ஸ்பூன் முட்டையை சட்டியில் பரவலாக ஊற்றவும்...

கறி அடை

தே.பொருட்கள் கறி -350 கிராம் அரிசி மாவு 1 குட்டான் தேங்காய் பால்-3 கப் முட்டை -1 மஞ்சள் தூள்,உப்பு தேவைக்கு…. செய்முறை அரிசி மாவு, முட்டை, மஞ்சள் தூள் அனைத்தையும் தண்ணீர் ஊற்றி ஊற வைக்க வேண்டும்….கறியை களரிகறி போலவோ அல்லது உங்கள் விருப்பம் போல மணமாக சமைத்து வச்சிகோங்க…பிறகு கறியை உதிர்த்து போட்டு எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து கையால் பிசைந்து அடுப்பில் சட்டி ஏத்தி தேவைக்கு நெய் அல்லது எண்ணெய் ஊற்றி வட்ட வடிவில் சுட வேண்டும்…. சுவையான கறி அடை ரெடி

தேங்காய் சோறு

தேவையான பொருட்கள் :- அரிசி – 200 கிராம் (லேசாக அழுகி இருந்தால் சூப்பர் ) தேங்காய் -1 வெள்ளைப்பூண்டு-1 பெரியது வெந்தயம் -1 tsp உப்பு- தேவைக்கு  செய்முறை தேங்காயை துருவி தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து பிழிந்து பால் எடுத்துக் கொள்ளவும். 2,3 முறை பால் எடுக்கலாம். 200 கிராம் அரிசிக்கு 600 மி.லி தண்ணீர் அளந்து எடுத்து அந்த தண்ணீரிலேயே தேங்காய் பால் எடுக்கவும். அரிசியை களைந்து தேங்காய் பால் ஊற்றி வெந்தயம் உரித்து அரிந்த வெள்ளைப்பூண்டு,உப்பு சேர்த்து கொதிக்க விட்டு வேக விடவும். மிகவும் சுலபமான செய்முறை கொண்ட ஆரோக்கியமான உணவு இது. தேங்காய் சோற்றுக்கு கருவாடு,மாசி,முட்டை சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.

கோழியப்பம்

தேவையானவை :  மைதா – ½ கிலோ  தேங்காய் – 4  நாட்டுக்குகோழி முட்டை – 4  உப்பு – தேவையான அளவு செய்முறை  :  தேங்காயை கொஞ்சம் கொஞ்சமாக மிக்ஸ்யில் போட்டு ரொம்ப கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி தலைப்பாலை எடுத்து வைத்துக்கொள்ளவும்.  அந்த தேங்காயில் இன்னும் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி மிக்ஸ்யில் போட்டு இரண்டாம் பால் எடுக்கவும்.  கடாயில் தலைப்பாலுடன் மைதாமாவு, உப்பு மற்றும் முட்டை இவைகளை சேர்த்து blender கொண்டு நன்கு அடிக்கவும்.  ஆப்பமாவு பதத்திற்கு வரும் வரை இரண்டாம் பாலையும் ஊற்றி அடித்து வைத்துக்கொள்ளவும்.  பின்பு, non-stick தவாவில் ஒரு கப் அளவிற்கு ஆப்பமாவை ஊற்றி முழுவதுமாக சுற்றி விடவும்.  ஓரம் பொன்னிறமாக பொரிந்ததும் ஒரு plate இல் தனியாக தட்டி விடவும். அழகாக விழுந்துவிடும்.

கீரை பாச்சோறு

தே.பொருட்கள் அரிசி 400கிராம் முருங்கை கீரை -ஒரு கட்டு தேங்காய் 1 வெங்காயம் 250 கிராம் சிறு பருப்பு 100 கிராம் கீரை பொடி 5டீஸ்பூன் மாசி தூள் 75 கிராம் மஞ்சள் தூள், உப்பு தேவைக்கு. செய் முறை முதலில் அரிசியை கழுவி மஞ்சள் தூள்,தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைக்க வேண்டும்.பிறகு சிறு பருப்பு வறுத்து தண்ணீரில் கொஞ்சம் ஊற போட்டு வைக்கவும்..வெங்காயத்தை நீட்ட வாக்கில் அரிந்து வைக்கவும்…தேங்காயை துறுவி வைக்கவும்…கீரையை உதிர்த்து வைக்கவும்…. பிறகு அரிசி நன்றாக கொதித்து வரும் போது அரிந்த வெங்காயம்,பறுப்பு,கீரை இவை அனைத்தையும் போட்டு கிளரி வேக விடவும்…. ஓரளவிற்கு வெந்து வரும் போது தேங்காய் பூ போட்டு நல்ல பதம் வந்ததும் அனைத்து விடலாம்…புக்கை சோறு பதம் வரும்… பிறகு இன்னொரு கடாயில் எண்ணைய் விட்டு நன்றாக காய்ந்ததும் அரிந்த வெங்காயம் மட்டும் போட்டு பொன்னிறமானதும் கீரை பாச்சோற்றில் தட்டி கீரை பொடி, மாசி போட்டு கிளரி விடவும்…

புளியோதரை சாதம்

வறுத்து அரைக்க: கடலைப்பருப்பு – 2 மே.கரண்டி உளுத்தம் பருப்பு – 1 மே.கரண்டி தனியா -1/2 மே.கரண்டி ரெட் சில்லி – 8-10 வெள்ளை எள் – 1 டீஸ்பூன் வெந்தயம் – 1 டீஸ்பூன் பெருங்காயம் – சிறுது தாளிப்பு: கடுகு – 1 1/2 டீஸ்பூன் கடலைப் பருப்பு – 2டீஸ்பூன் வேர்கடலை 2 மே.கரண்டி கறிவேப்பிலை ஒரு கொத்து சிகப்பு வத்தல் 4-5 வெல்லம் சிறுது பெருங்காயம் – சிறுது நல்லெண்ணெய் – 2 குழி கரண்டி மற்றவை: புளி எலுமிச்சை அளவு (திக் கரைசல்) உப்பு போட்டு வேக வைத்த பச்சரிசி சாதம் – 4 கப் (உதிரியாக வேக வைத்து ஆறிய பிறகு நல்லெண்ணெய் ஊற்றி கலந்து தனியாக வைக்கவும்.)

முட்டை கொத்து புரோட்டா

தேவையான பொருட்கள்: புரோட்டா – 2 முட்டை – 1 வெங்காயம் – 1 பொடியாக நறுக்கியது தக்காளி – 1 பொடியாக நறுக்கியது மஞ்சள் தூள் – சிறிதளவு வத்தல் தூள் – டீஸ்பூன் மிளகு தூள் – 1/2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன் மல்லி இலை – அலங்கரிக்க (பொடியாக நறுக்கியது) எண்ணெய் – தேவைக்கு உப்பு – தேவைக்கு தாளிக்க: பெருஞ்சீரகம் – 1/2 டீஸ்பூன் கருவேப்பிலை – தேவைக்கு பச்சை மிளகாய் – 1 நறுக்கியது செய்முறை: முதலில் புரோட்டாவை பொடிதாக பிய்த்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ளதை போட்டு தாளிக்கவும். பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின்பு வெங்காயம் சேர்த்து வதங்கியதும் தக்காளி சேர்க்கவும். தக்காளி வெந்ததும் மஞ்சள் தூள், வத்தல் தூள், மிளகு தூள், தேவைக்கு உப்பு சேர்த்து நன்கு கிளறவும். பிறகு முட்டை சேர்த்து கிளறி உதிரியாக வெநததும் புரோட்டாவை சேர்த்து நன்கு கிளறி மல்லி இலை தூவி இறக்கவும். குறிப்பு: 1. முட்டைக்கு பதிலாக தேவையான காய்கறிகள் சேர்த்து கொள்ளலாம். 2. இறுதியில் எலுமிச்சை சாறு சேர்த்தும் பறிமாறலாம்.

சிக்கன் கட்லெட்

தேவையான பொருட்கள்: போன்லெஸ் சிக்கன் – 250 கிராம் இஞ்சி பூண்டு விழுது – 1மே.கரண்டி மஞ்சள்தூள் – சிறுது தனி மிளகாய் தூள் – 2 டீஸ்பூன் தனியா தூள் – 1 டீஸ்பூன் மிளகுதூள் – 1 டீஸ்பூன் சிரகத்தூள் -1/2 டீஸ்பூன் கரம் மசாலா – 1/2 டீஸ்பூன் உப்பு – தேவைக்கு செய்முறை: சிக்கனை அலசி மேலே சொன்ன பொருட்களை எல்லாம் ஒன்றாக மிக்ஸ் செய்து சிறுது தண்ணீர் ஊற்றி குக்கரில் வேக வைக்கவும். பிறகு குக்கரை திறந்து தண்ணீர் இருந்தால் சிறுது நேரம் குறைந்த தணலில் வத்த வைத்து ஆறிய பிறகு பிளண்டரில் சிக்கனை மசித்து தனியாக எடுத்து வைக்கவும். உருளைக்கிழங்கு – 2 பெரியது (வேக வைத்தது) வேக வைத்த உகிழங்கை தோல் நீக்கி மசித்து வைக்கவும். வெங்காயம் – 1 பெரியது (பொடியாக நறுக்கியது) பச்ச மிளகாய் -1 கொத்தமல்லி – ஒரு கைபிடி உப்பு – தேவைக்கு மசித்த சிக்கனுடன் + உ.கிழங்கு, வெங்காயம், ப.மிளகாய், பொடிசாக நறுக்கிய கொ.மல்லி சேர்த்து நன்றாக பிசைந்து விரும்பிய வடிவில் தட்டி வைக்கவும். முட்டை -2 வெள்ளை கரு மட்டும் இதனுடன் மிளகு தூள் சிறுது பிரெட் க்ரம்ஸ் – தேவைக்கு பிறகு தட்டி வைத்த சிக்கனை முட்டையில் முக்கி ...

சிக்கன் ஃப்ரைடு ரைஸ்

தேவையான பொருட்கள்: சாதம் – 1கப் சிக்கன் 65 – 6-7 துண்டுகள் (போன்லெஸ்) மற்றவை: எண்ணெய் -2 மே.கரண்டி பூண்டு – 6 பல் பொடியாக நறுக்கியது பச்சமிளகாய் – 1 பொடியாக நறுக்கியது வெங்காயம் – 1/2 நீட்டமாக நறுக்கியது. விரும்பிய காய்கறிகள் கேரட், கோஸ், குடைமிளகாய், பட்டாணி -1 கப் சோயா சாஸ் – 1/2 மே.கரண்டி மிளகுத்தூள் – 1 மே.கரண்டி முட்டை – 2 உப்பு – தேவைக்கு செய்முறை: முதலில் ஒரு நாண்ஸ்டிக் பேனில் சிறுது எண்ணெய் ஊற்றி முட்டையினை உடைத்து ஊற்றி அதில் சிட்டிக்கை மிளகு, சிட்டிகை உப்பு போட்டு நன்றாக கரண்டி வைத்து பிரட்டி பூ போல் உதிரியாக ரெடி செய்து தனியாக வைக்கவும். பிறகு அதே பேனில் எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கிய பூண்டு, பச்ச மிளகாய் வெங்காயம் சேர்த்து வதக்கவும் பிறகு நறுக்கிய காய்கறிகள் சேர்த்து வதக்கவும் இதனுடன் தேவைக்கு மிளகுத்தூள், சிறுது உப்பு சேர்த்து குறைந்த தணலில் வேக வைக்கவும். பாதி வெந்த பிறகு சிக்கன் 65 துண்டுகள் , முட்டை சேர்த்து பிரட்டி விடவும் இதனுடன் சோயாசாஸ் ஊற்றி மிக்ஸ் செய்வும் பிறகு அதில் சாதம் கலந்து நன்றாக மிக்ஸ் செய்து சிம்மில் 5 நிமிடங்கள் குறைந்த தணலில் வைத்...

கேரட் சாதம்

தேவையான பொருட்கள் : கேரட்                                      –        3 சாதம்                                                 –        1 கப் வெங்காயம்                            –        1 கடலைபருப்பு                         –        ¼ டீஸ்பூன் கறிவேப்பிலை                        –        ஒரு கொத்து நல்லெண்ணெய்                     –        2 குழி கரண்டி கடுகு          ...

கொத்தமல்லி சாதம்

தேவையான பொருட்கள்: கொத்த மல்லி    – 1 கட்டு வேகவைத்து வடித்த சாதம் -1 கப் பச்சை மிளகாய் – 2- 3(கார தேவைக்கு) பூண்டு        – 2 பற்கள் இஞ்சி         – 1 சிறிய துண்டு ந.எண்ணெய்- 1 தே.கரண்டி கடுகு           -1\2 தே.கரண்டி சீரகம்          – 1\2 தே.கரண்டி கடலை பருப்பு- 1\2தே.கரண்டி உளுந்து        – 1\2 தே.கரண்டி பெ.வெங்காயம்- பாதி உப்பு – தே.அளவு செய்முறை: 1) முதலில் கொத்தமல்லி இலை,பச்சை மிளகாய்,இஞ்சி மற்றும் பூண்டு பற்களை மிக்ஸி ஜாரில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி அடித்து கொள்ளவும் 2) ஒரு வாணலியில் 1 தே.கரண்டி ந.எண்ணெய் விட்டு எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் கடுகு,சீரகம்,உளுந்து,கடலை பருப்பு சேர்த்து வதக்கவும் 3) கடுகு வெடித்ததும் நறுக்கிய பாதி பெ.வெங்காயத்தை இதனுடன் சேர்த்து நன்கு வதக்கவும் 4) வெங்காயம் நன்கு வதங்கியதும் நாம் அரைத்து வைத்துள்ள கொத்தமல்லி கலவையை இதனுடன் சேர்த்து நன்கு கிளறவும் 5) பிறகு நாம் எடுத்து வைத்துள்ள வேக வைத்த சாதத...

தக்காளி சாதம்

தேவையான பொருட்கள் : சாதம்                                       –        1 கப் நல்லெண்ணெய்           –        2 டீஸ்பூன் பட்டை                          –        ஒரு சின்ன துண்டு ஏலக்காய்                      –        1 கிராம்பு                          –        1 வெங்காயம்                   –        1 (பெரியது) தக்காளி                         –        3 மஞ்சள் தூள்              ...

தயிர் சாதம்

தேவையான பொருட்கள் :- சாதம் – 1 கப் தயிர்   – 1 டீஸ்பூன் வெதுவெதுப்பான பால் – 2 கப் மாதுளை – தேவையான அளவு தாளிக்கத் தேவையானவை :  எண்ணெய் – 1 டீஸ்பூன் கடுகு – ½ டீஸ்பூன் சீரகம்         – ¼ டீஸ்பூன் கடலை பருப்பு – ¼ டீஸ்பூன் உளுந்த பருப்பு – ½ டீஸ்பூன் காய்ந்த மிளகாய் – 2 முந்திரி பருப்பு – 5-6 (விருப்பப்பட்டால்) பெருங்காயத்தூள் – 1 பின்ச் இஞ்சி செய்முறை :- • சாதத்தை 2 (அ) 3 விசில் விட்டு மசிய வேக வைத்து எடுத்து சூட்டுடன் நன்றாக மசித்து விடவும். • சாதத்தில் தண்ணீர் இருக்கக கூடாது. • சாதம் ஆறியதும் ஒரு கப் வெதுவெதுப்பான பாலை கலக்கவும். • தயிரை சேர்த்து நன்றாக பிரட்டி, மசித்து சமமாக வைத்து 10 நிமிடம் அப்படியே வைக்கவும். • ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடாக்கவும், காய்ந்த உடன் எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு, உளுந்து, கடலை பருப்பு, சீரகம், இஞ்சி தட்டி போடவும். • விருப்பப்பட்டால் முந்திரி பருப்பு (4 -5) சேர்க்கவும். • பெருங்காயத்தூள், காய்ந்த வத்தல், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். • தாளிக்கும் போது எண்ணெய் சூடானால் அடுப்பை ...

சிக்கன் ஃபிரைட் ரைஸ்

தேவையான பொருட்கள் : காய்கறிகள்                       –  போதுமான அளவு(கேரட்,பீன்ஸ்,கோஸ்) முட்டை                                   –        2 பூண்டு                                     –        4-5  பொடியாக நறுக்கியது எலும்பில்லா(BORNLESS) சிக்கன் –       1/4 கிலோ சாதம்                                                –        தேவையான அளவு மேகி கியூப்                             –        1 எண்ணெய்            ...

உருளை கிழங்கு வருவல்

தேவையான பொருட்கள் : உருளை கிழங்கு                     –        4 ( மீடியம் சைஸ்) சின்ன வெங்காயம்                 –        10,15 பச்சை மிளகாய்                      –        2 ( நீளமாக நறுக்கியது) கடுகு                                       –        ½ டீஸ்பூன் சீரகம்                                      –        ½ டீஸ்பூன் உளுந்து                                  –        ¼ டீஸ்பூன் எண்ணெய்            ...

பீட்ரூட் ரைஸ்

தாளிக்க: ந.எண்ணெய் – 2 தே.கரண்டி கடுகு – 1\4 தே.கரண்டி சீரகம் – 1\4 தே.கரண்டி வத்தல் – கார தேவைக்கு கடலை பருப்பு -சிறிதளவு கருவேப்பிலை -சிறிதளவு செய்முறை: 1)ஒரு வாணலியில் 2 தே.கரண்டி ந.எண்ணெய் விட்டு கடுகு ,சீரகம் ,வத்தல் ,கருவேப்பலை ,காய்ந்த வத்தல் சேர்த்து கருக விடாமல் நன்கு வதக்கவும் (டிப்ஸ் : தாளிக்கும் பொது அடுப்பை சிம்மிலே வைக்கவும்) 2)பின்பு அதனுடன் முந்திரி பருப்பு சேர்த்து வதக்கவும்.பின்னர் ஒரு சிட்டிகை அளவு பெருங்காயத் தூள்,மசாலா தூள், மஞ்சள் தூள் தே.அளவு உப்பு சேர்த்து வதக்கவும் 3)நன்கு வதங்கியதும் அதனுடன் பச்சை பட்டாணி,துருவிய பீட்ரூட் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும் (டிப்ஸ்:பச்சை பட்டாணிக்கு பதிலாக நாம் வேறு காய்கறிகளும் சேர்த்து கொள்ளலாம்) 4)கொஞ்சம் வதங்கியவுடன் நாம் முன்னரே எடுத்து வைத்திருக்கும் வேக வைத்த சாதத்தினை சேர்த்து நன்கு கிளறவும் 5)சிறிது நேரம் மூடி போட்டு அடுப்பிலே வைத்து பின்னர் இறக்கி பரிமாறவும் சுவையான சத்துக்கள் நிறைந்த பீட்ரூட் ரைஸ் தயார்.

சாம்பார் சாதம்

தேவவையான பொருட் கள் : அரிசி – 3/4கப்  துவரம் பருப்பு-1/2 கப்  தண்ணீர் – 4கப்  விருப்பமான காய்கறிகள் -1கப்  (கேரட், பீன்ஸ்,தக்காளி,வெங்காயம், முருங்கை) புளி கரைசல் -1/4கப்  சாம்பார் பவுடர் – 2-3 டேபிள்ஸ்ூன் மஞ்சள் தூள் – 2-3 டேபிள்ஸ்பூன் உப்பு -தேவைக்கு பூண்டு- 7-8 நெய் – 1டீஸ் பூன் பச்சைமிளகாய் -1 எண்ணெய் – 2-3 டேபிள் ஸ் பூன் தாளிக்க: நெய் – 2 டேபிள் ஸ்பூன் கடுகு-1/2டீஸ்பூன் சீரகம் -1/2டீஸ்பூன் காய்ந்த வத்தல் – 2-3(காரத்திற்கேற்ப) பெருங்காய தூள் – சிறிதளவு கருவேப்பிலை- சிறிதளவு செய் முறை: முதலில் அரிசி,பருப்பு இரண்டையும் தண்ணீர் விட்டு நன்கு அலசி நான்கு  கப் தண்ணீர் ஊற்றி பத்து  நிமிடம் ஊற வைக்கவும்.பிறகு அந்த தண்ணீரை வடித்துவிட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி உப்பு , நெய்,ப.மிளகாய்,பூண்டு சேர்த்து குக்கரில் மூன்று விசில் வரை வேக விடவும்.பிறகு ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றிவெங்காயம்,மற்றும் விருப்பமான காய்கறியை போட்டு அத்துடன் சாம்பார் பவுடர்,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.குக்கராக இருந்தால் காய்கறிகள் மூழ்கும் அளவு தண்ணீ...

புளிச்சோறு

தேவையான பொருட்கள் புளியோதரை பொடி செய்ய: கடலை பருப்பு-2 டேபிள்ஸ்பூன் உளுத்தம் பருப்பு-1டேபிள்ஸ்பூன் காய்ந்த வத்தல்- 8-10 தனியா- 1 1/2டேபிள்ஸ்பூன் வெள்ளை எள்-1 டீஸ்பூன் வெந்தயம்-1டீஸ்பூன் பெருங்காய தூள்-1சிட்டிகை தாளிக்க: நல்லெண்ணெய்- 4-5 டேபிள்ஸ்பூன் கடுகு-1 1/2 டீஸ்பூன் கடலை பருப்பு-1 1/2 டீஸ்பூன் வேர்கடலை-2 டேபிள்ஸ்பூன் முந்திரி- விரும்பினால் கருவேப்பிலை-1 கொத்து காய்ந்த வத்தல்- 4-5 வெல்லம்- சிறிதளவு புளி- எலுமிச்சை அளவு செய்முறை:  சாதாரணமாக சாதம் ரெடி பண்ணி வைத்து ஆறிய பின் கொஞ்சம் நல்லெண்ணெய் ஊற்றி நன்றாக கிண்டி விட்டால் உதிரி உதிரியாக வந்து விடும்.இதை தனியாக வைத்து கொள்ளவும். ஒரு சட்டியை அடுப்பில் வைத்து கொஞ்சம் சட்டி காய்ந்ததும், வெந்தயம்,கடலை பருப்பு,உளுத்தம் பருப்பு,தனியா சேர்த்து சிம்மில் வைத்து கலர் மாறிய பிறகு, வத்தல் போட்டு பின் எள் சேர்க்கவும். எள் வெடித்து சிதறும் அந்த நேரத்தில் அடுப்பை ஆஃப் செய்து அந்த சூட்டில் வறுக்கவும்.பின் இவற்றை ஆற விட்டு மிக்ஸியில் அரைத்து வைத்து காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்தால் தேவைப்படும் போது உபயோகித்து கொள்ளலாம்...

கொண்டை கடலை புலாவ்

தேவையான பொருட்கள்: பாஸ்மதி அரிசி-1கப் தண்ணீர்- 2கப் கொண்டை கடலை-1/2 கப் வெங்காயம்-1 தக்காளி-1 பச்சை மிளகாய்- காரத்திற்கேற்ப இஞ்சி பூண்டு விழுது-1டேபிள்ஸ்பூன் தயிர்-1டேபிள்ஸ்பூன் உப்பு-தேவைக்கு தாளிக்க: சீரகம்,பட்டை,கிராம்பு,ஏலம்,பிரிஜ்ஜி இலை. செய்முறை: குக்கர் காய்ந்ததும் பட்டரை போட்டு சிம்மில் வைத்து தாளிக்க தேவையான பொருளை போட்டு வதக்கி பின் நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கிய பின் இஞ்சி,பூண்டு போட்டு சிம்மில் வைத்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி,நறுக்கிய பச்சை மிளகாய்,தக்காளி சேர்த்து நன்கு மசிந்த பிறகு தயிர் சேர்த்து பிரட்டி வேக வைத்துள்ள கொண்டை கடலை போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் 5நிமிடம் சிம்மில் வைத்து வேக வைத்து பின் கொத்தமல்லி,புதினா சேர்த்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றி தேவைப்பட்டால் உப்பு சேர்த்து ஊற வைத்துள்ள பாஸ்மதி அரிசியை சேர்த்து ஒரு விசில் தீயை கூட்டி பின் 5நிமிடம் சிம்மில் வைத்து ஆவி அடங்கிய பிறகு குக்கரை திறக்கவும். பின் குறிப்பு: கொண்டை கடலையை 7-8 மணி நேரம் வரை ஊற வைத்து குக்கரில் வேக வைக்கவும்.பாஸ்மதி அரிசி அல்லது சாதாரண அர...

வேர்க்கடலை பொடி சாதம்

தேவையான பொருட்கள்: நெய் அல்லது நல்லெண்ணெய்-2 டேபிள்ஸ்பூன் கடுகு-சிறிதளவு சீரகம்-சிறிதளவு வேர்க்கடலை-தேவைக்கு(தோல் நீக்காதது) முந்திரி பருப்பு-தேவைக்கு காய்ந்த வத்தல்-காரத்திற்கேற்ப மஞ்சள் தூள்-சிறிதளவு கருவேப்பிலை-ஒரு கொத்து வேகவைத்த சாதம்-ஒருகப் உதிரி உதிரியாக வேர்கடலை மசாலா-சிறிதளவு வேர்கடலை மசாலா செய்ய தேவையான பொருட்கள்: வேர்க்கடலை-அரை கப் தனியா-2 டேபிள் ஸ்பூன் சீரகம்-ஒரு டேபிள்ஸ்பூன் காய்ந்த வத்தல்-10 to 12 பூண்டு-7 பல் புளி-ஒரு சிறிய உருண்டை கல் உப்பு-ஒரு டீஸ்பூன் எண்ணெய்-சிறிதளவு செய்முறை:  ஒரு பேனில் 2 டேபிள்ஸ்பூன் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி கடுகு,சீரகம்,வேர்க்கடலை,முந்திரி பருப்பு,காய்ந்த வத்தல்,மஞ்சள் தூள்,கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.பின்னர் வேகவைத்த ஆறிய சாதத்தை அத்தோடு சேர்த்து கிளறவும்.பின்னர் வேர்கடலை மசாலா சிறிதளவு சேர்க்கவும்.சாதம் எண்ணெய் இல்லாமல் இருந்தால் சிறிதளவு நெய் விடவும்.பின்னர் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி இறக்கவும். வேர்க்கடலை மசாலா பொடி செய்ய மேலே சொன்ன பொருட்களை சிறிதளவு எண்ணெய் ஊற்றி லேசாக வறுக்கவும்.பின்னர் ஆறியது...