வேர்க்கடலை பொடி சாதம்

தேவையான பொருட்கள்:

நெய் அல்லது நல்லெண்ணெய்-2 டேபிள்ஸ்பூன்
கடுகு-சிறிதளவு
சீரகம்-சிறிதளவு
வேர்க்கடலை-தேவைக்கு(தோல் நீக்காதது)
முந்திரி பருப்பு-தேவைக்கு
காய்ந்த வத்தல்-காரத்திற்கேற்ப
மஞ்சள் தூள்-சிறிதளவு
கருவேப்பிலை-ஒரு கொத்து
வேகவைத்த சாதம்-ஒருகப் உதிரி உதிரியாக
வேர்கடலை மசாலா-சிறிதளவு
வேர்கடலை மசாலா செய்ய தேவையான பொருட்கள்:
வேர்க்கடலை-அரை கப்
தனியா-2 டேபிள் ஸ்பூன்
சீரகம்-ஒரு டேபிள்ஸ்பூன்
காய்ந்த வத்தல்-10 to 12
பூண்டு-7 பல்
புளி-ஒரு சிறிய உருண்டை
கல் உப்பு-ஒரு டீஸ்பூன்
எண்ணெய்-சிறிதளவு

செய்முறை: 

ஒரு பேனில் 2 டேபிள்ஸ்பூன் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி கடுகு,சீரகம்,வேர்க்கடலை,முந்திரி பருப்பு,காய்ந்த வத்தல்,மஞ்சள் தூள்,கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.பின்னர் வேகவைத்த ஆறிய சாதத்தை அத்தோடு சேர்த்து கிளறவும்.பின்னர் வேர்கடலை மசாலா சிறிதளவு சேர்க்கவும்.சாதம் எண்ணெய் இல்லாமல் இருந்தால் சிறிதளவு நெய் விடவும்.பின்னர் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி இறக்கவும். வேர்க்கடலை மசாலா பொடி செய்ய மேலே சொன்ன பொருட்களை சிறிதளவு எண்ணெய் ஊற்றி லேசாக வறுக்கவும்.பின்னர் ஆறியதும் மிக்ஸியில் பவுடராக அரைத்து வைத்துக் கொள்ளவும்.தேவைப்படும்போது இதனை உபயோகிக்கலாம். இதனைப் போன்று தோசை ஊற்றி அதன்மேல் பூரிக்கு செய்யும் உருளைக்கிழங்கு மசாலா இல்லையெனில் நமக்குப் பிடித்த ஏதாவது கிரேவி இருந்தால் அதன் மேல் பரப்பி பின்னர் இந்த வேர்கடலை மசாலா பொடியையும் சேர்த்தால் ஒரு வெரைட்டியான மசால் தோசை ரெடி பண்ணலாம். இப்போது ஹெல்தியான "வேர்க்கடலை பொடி சாதம்" ரெடி.

Comments

Popular posts from this blog

சில்லி தோசை

சாம்பார் சாதம்