கொண்டை கடலை புலாவ்

தேவையான பொருட்கள்:

பாஸ்மதி அரிசி-1கப்
தண்ணீர்- 2கப்
கொண்டை கடலை-1/2 கப்
வெங்காயம்-1
தக்காளி-1
பச்சை மிளகாய்- காரத்திற்கேற்ப
இஞ்சி பூண்டு விழுது-1டேபிள்ஸ்பூன்
தயிர்-1டேபிள்ஸ்பூன்
உப்பு-தேவைக்கு
தாளிக்க:
சீரகம்,பட்டை,கிராம்பு,ஏலம்,பிரிஜ்ஜி இலை.

செய்முறை:

குக்கர் காய்ந்ததும் பட்டரை போட்டு சிம்மில் வைத்து தாளிக்க தேவையான பொருளை போட்டு வதக்கி பின் நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கிய பின் இஞ்சி,பூண்டு போட்டு சிம்மில் வைத்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி,நறுக்கிய பச்சை மிளகாய்,தக்காளி சேர்த்து நன்கு மசிந்த பிறகு தயிர் சேர்த்து பிரட்டி வேக வைத்துள்ள கொண்டை கடலை போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் 5நிமிடம் சிம்மில் வைத்து வேக வைத்து பின் கொத்தமல்லி,புதினா சேர்த்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றி தேவைப்பட்டால் உப்பு சேர்த்து ஊற வைத்துள்ள பாஸ்மதி அரிசியை சேர்த்து ஒரு விசில் தீயை கூட்டி பின் 5நிமிடம் சிம்மில் வைத்து ஆவி அடங்கிய பிறகு குக்கரை திறக்கவும்.
பின் குறிப்பு: கொண்டை கடலையை 7-8 மணி நேரம் வரை ஊற வைத்து குக்கரில் வேக வைக்கவும்.பாஸ்மதி அரிசி அல்லது சாதாரண அரிசியிலும் இதனை பண்ணலாம்.
       சத்தான,சுவையான லன்ச் பாக்ஸ்ஸிற்கு ஏற்ற “கொண்டை கடலை புலாவ்” ரெடி……

Comments