புளிச்சோறு

தேவையான பொருட்கள்

புளியோதரை பொடி செய்ய:
கடலை பருப்பு-2 டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு-1டேபிள்ஸ்பூன்
காய்ந்த வத்தல்- 8-10
தனியா- 1 1/2டேபிள்ஸ்பூன்
வெள்ளை எள்-1 டீஸ்பூன்
வெந்தயம்-1டீஸ்பூன்
பெருங்காய தூள்-1சிட்டிகை
தாளிக்க:
நல்லெண்ணெய்- 4-5 டேபிள்ஸ்பூன்
கடுகு-1 1/2 டீஸ்பூன்
கடலை பருப்பு-1 1/2 டீஸ்பூன்
வேர்கடலை-2 டேபிள்ஸ்பூன்
முந்திரி- விரும்பினால்
கருவேப்பிலை-1 கொத்து
காய்ந்த வத்தல்- 4-5
வெல்லம்- சிறிதளவு
புளி- எலுமிச்சை அளவு

செய்முறை:

 சாதாரணமாக சாதம் ரெடி பண்ணி வைத்து ஆறிய பின் கொஞ்சம் நல்லெண்ணெய் ஊற்றி நன்றாக கிண்டி விட்டால் உதிரி உதிரியாக வந்து விடும்.இதை தனியாக வைத்து கொள்ளவும். ஒரு சட்டியை அடுப்பில் வைத்து கொஞ்சம் சட்டி காய்ந்ததும், வெந்தயம்,கடலை பருப்பு,உளுத்தம் பருப்பு,தனியா சேர்த்து சிம்மில் வைத்து கலர் மாறிய பிறகு, வத்தல் போட்டு பின் எள் சேர்க்கவும். எள் வெடித்து சிதறும் அந்த நேரத்தில் அடுப்பை ஆஃப் செய்து அந்த சூட்டில் வறுக்கவும்.பின் இவற்றை ஆற விட்டு மிக்ஸியில் அரைத்து வைத்து காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்தால் தேவைப்படும் போது உபயோகித்து கொள்ளலாம். புளியை ஊற வைத்து கரைத்து வைத்து கொள்ளவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,கடுகு,கடலை பருப்பு,கருவேப்பிலை போட்டு,பிறகு வேர்கடலை,விருப்பப்பட்டால் முந்திரி சேர்க்கலாம்.இதனுடன் மஞ்சள் தூள் போட்டு,காய்ந்த வத்தலை சின்ன சின்ன துண்டாக வெட்டி போட்டு வதக்கி,கரைத்து வைத்துள்ள புளிகரைசலை ஊற்றி சிம்மில் வைத்து கொதிக்க விட்டு உப்பு,பெருங்காயத்தூள் சேர்த்து விடவும்.சிறிது நேரத்தில் எண்ணெய் விட்டு வரும் போது அரைத்து வைத்துள்ள புளியோதரை பவுடர் 2டீஸ்பூன் அத்தோடு சிறிதளவு வெல்லம் சேர்த்து அடுப்பை ஆஃப் செய்யவும்.ஏற்கனவே தயாரித்து வைத்துள்ள சாதத்தில் அரைத்து வைத்துள்ள புளியோதரை பொடியை தேவையான அளவு சேர்த்து கிளறவும்.சாதத்தில் நல்லெண்ணெய் ஊற்றி இருப்பதால் பொடி நன்றாக சேர்ந்து விடும்.பின்னர் தாளித்து வைத்துள்ள புளிகரைசலை சிறிது சிறிதாக ஊற்றி கிளறவும்.

Comments