கொத்தமல்லி சாதம்


தேவையான பொருட்கள்:

கொத்த மல்லி    – 1 கட்டு
வேகவைத்து வடித்த சாதம் -1 கப்
பச்சை மிளகாய் – 2- 3(கார தேவைக்கு)
பூண்டு        – 2 பற்கள்
இஞ்சி         – 1 சிறிய துண்டு
ந.எண்ணெய்- 1 தே.கரண்டி
கடுகு           -1\2 தே.கரண்டி
சீரகம்          – 1\2 தே.கரண்டி
கடலை பருப்பு- 1\2தே.கரண்டி
உளுந்து        – 1\2 தே.கரண்டி
பெ.வெங்காயம்- பாதி
உப்பு – தே.அளவு



செய்முறை:

1) முதலில் கொத்தமல்லி இலை,பச்சை மிளகாய்,இஞ்சி மற்றும் பூண்டு பற்களை மிக்ஸி ஜாரில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி அடித்து கொள்ளவும்
2) ஒரு வாணலியில் 1 தே.கரண்டி ந.எண்ணெய் விட்டு எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் கடுகு,சீரகம்,உளுந்து,கடலை பருப்பு சேர்த்து வதக்கவும்
3) கடுகு வெடித்ததும் நறுக்கிய பாதி பெ.வெங்காயத்தை இதனுடன் சேர்த்து நன்கு வதக்கவும்
4) வெங்காயம் நன்கு வதங்கியதும் நாம் அரைத்து வைத்துள்ள கொத்தமல்லி கலவையை இதனுடன் சேர்த்து நன்கு கிளறவும்
5) பிறகு நாம் எடுத்து வைத்துள்ள வேக வைத்த சாதத்தினை இதனுடன் சேர்த்து கிளறி இறக்கவும்

சுவையான கொத்த மல்லி சாதம் ரெடி.

Comments

Popular posts from this blog

சில்லி தோசை

சாம்பார் சாதம்